உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தங்க தேரோட்டம்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் தங்க தேரோட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரத்துடன் திமுக கட்சியின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் கிளை செயலாளர் வீமராஜ் தலைமையில் தங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல்கார்த்தி. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாரியப்பன். நகர இளைஞரணி சதீஷ்குமார். தாஸ், சிவாஜி,கருப்பசாமி, நாகூர்கனி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.