கோவை: கலை கட்டிய மாணவர்களின் பொங்கல் விழா !

அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் புத்தாண்டுப் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-05 05:45 GMT
கோவை, அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் புத்தாண்டுப் பண்டிகையான பொங்கல் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படிக்கும் இக்கல்லூரியில், மஞ்சள் கிழங்கு, கரும்பு, பச்சரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு மண் பானையில் மாணவ மாணவியர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.தமிழர் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்து, மாணவிகள் வண்ண நூல் சேலை உடுத்தி பொங்கல் விழாவில் பங்கேற்றனர். பறை, மேளம் முழங்க, மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Similar News