காரைக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், ஜனவரி 2025- இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Update: 2025-01-07 01:36 GMT
சிவகங்கை மாவட்டம், ஜனவரி 2025- இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 10.01.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News