தாட்கோ மூலமாக தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள்

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தாட்கோ மூலமாக தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது

Update: 2025-01-07 01:30 GMT
சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தாட்கோ மூலமாக தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. மேலும், தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தொழில் பயிற்சி (ITI), பட்டயம் படிப்பு (Diploma) மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியினை முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ், பயன்பெற விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News