தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை திருமங்கலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

Update: 2025-01-07 01:31 GMT
மதுரை திருமங்கலத்தில் திமுக அரசை கண்டித்து நேற்று (ஜன.6) தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பாலியல் வன் கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. மழை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதை கண்டிக்க தவறிய திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தேமுதிக தெற்கு மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.

Similar News