இலுப்பூர்: புதுக்கோட்டை கட்டியாவயல் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (15), இலுப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக உள் ளார். இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூருக்கு பைக்கில் சென்றுக் கொண் டிருந்தார். வீரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த முதியவர் பால்ராஜ் மீது எதிர்பாராதவித மாக பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த காவலர் பிரவீன்குமார் புதுக்கோட்டையில் தனி யார் மருத்துவமனையிலும், பால்ராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பால்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அன் னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.