ராமநாதபுரம் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட விஏஓ

பரமக்குடியில் நான் தப்பு பண்ணிட்டேன் எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஏஓ.

Update: 2025-01-08 05:26 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டு பரமக்குடி தாலுகா (கூடுதல்) கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த யூனுஸ் கடந்த 4.1.2025 ந்தேதி அன்று பரமக்குடி வட்டாட்சியர் மற்றும் இதர வருவாய்த்துறை அலுவலர்கள் மீதுபொய்யான புகார் தெரிவித்து வெளியிட்டிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், நான் வெளியிட்ட அந்த வீடியோ தவறானது, எனக்கிருந்த "வேலைப்பளு மற்றும் பணிச்சுமையால் மன அழுத்தம் காரணமாக அந்த வீடியோவை தவறாக வெளியிட்டு விட்டேன் அந்த சம்பவத்திற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என வருத்தம் தெரிவித்து, தான் செய்த தவறை உணர்ந்து தற்போது பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Similar News