பள்ளப்பட்டி- அரசுப்பள்ளி விஞ்ஞானி மாணவனுக்கு பாராட்டு.
பள்ளப்பட்டி- அரசுப்பள்ளி விஞ்ஞானி மாணவனுக்கு பாராட்டு.
பள்ளப்பட்டி- அரசுப்பள்ளி விஞ்ஞானி மாணவனுக்கு பாராட்டு. கரூர் மாவட்டம் ,அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முஹம்மத் ரூபியான். இன்றைய சூழலில் அதிகமாக சேர்ந்து வரும் குப்பை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறையையும் தீப்பற்றினால், தானாகவே தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவியையும், இரவு நேரங்களில் வாகனங்கள் உமிழும் ஒளியால் ஏற்படும் விபத்தை தடுக்க தானியங்கி கருவியையும், ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனம் நகரும் கருவியையும் கண்டுபிடித்து பள்ளப்பட்டியில் அனைவரும் முன்பும் செயல் விளக்கம் செய்து காட்டினார். இது தொடர்பாக மாணவனை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வரும் வேளையில், பள்ளப்பட்டி மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நேற்று அசோசியேஷன் தலைவர் முகமது அயூப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவனை பாராட்டி பொன்னாடை மற்றும் நினைவுபரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்