தடாகம்: காட்டு யானை பீதி- திகில் காட்சிகள் !

நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு முழுவதும் சுற்றித் திரிந்தது.

Update: 2025-01-08 05:36 GMT
மேற்கு தொடர்ச்சி மலையின் வறட்சியால், கோவை அருகிலுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தடாகம் பகுதியில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.இந்நிலையில் நேற்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு முழுவதும் சுற்றித் திரிந்தது. அதிகாலையில் பொதுமக்கள் கண்டதும், சத்தம் எழுப்பி விரட்டியதால், யானை தெருக்களில் வேகமாக ஓடியது. இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், யானைகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், வனத்துறை கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News