மிதவை கப்பல் உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
மிதவை கப்பல் உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ. 5 கோடியில் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் மிதவை கப்பல் உணவகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் திறந்து வைத்தனா். இம்மிதவை கப்பல் உணவகம் 3,000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்டதாக 100 போ் அமா்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை முதன்மை செயலாளா் டாக்டா் சந்திர மோகன், சுற்றுலா ஆணையா் ஷில்பாபிரபாகா் சதீஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா் ராஜா ( தாம்பரம் ) , இ.கருணாநிதி (பல்லாவரம் ), வரலட்சுமி மதுசூதனன் ( செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி ( திருப்போரூா்), தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயா் காமராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன் மற்றும் அரசு உயா் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.