விபத்தானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது இந்த காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

விபத்தானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது இந்த காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Update: 2025-01-08 05:28 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பகுதி டானிங்டன் பகுதி.இந்த பகுதி மிகமுக்கியமான மேட்டுப்பாளையம், கோடநாடு, கீழ் கோத்தகிரி,சோலூர்மட்டம் செல்லக்கூடிய சாலைவழி சந்திப்பாகும்.நாள்தோறும் இங்கு காலை நேரங்களில் பணிக்கு செல்வோர்,பள்ளி,கல்லூரி செல்லக்கூடியவர்கள் அதிக அளவில் கூடும் இடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கேர்பெட்டா பகுதியில் இருந்து டிப்பர் லாரி ஒன்று மேட்டுப்பாளையம் செல்வதற்காக வந்துள்ளது.அப்போது டிப்பர் லாரி கேர்பெட்டா பகுதியில் இருந்து வரும்போதே பிரேக் பிடிக்காமல் வந்த நிலையில்,டானிங்டன் பகுதியில் வரும் போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் எதிரே கோத்தகிரி நோக்கி வந்த கார் மீது விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உணவகத்தில் இருந்தவர்கள் உள் பக்கத்தில் பணி செய்ததால் உணவகத்தின் பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமலும்,காரின் ஹேர் பேக் ஓபன் ஆனதால் காரில் பயணித்த இரண்டு ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காலை நேரத்தில் ஏற்ப்பட்ட விபத்தால் கோத்தகிரி டானிங்டன்  பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த விபத்தானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது இந்த காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Similar News