கவர்னர் குறித்து அவதுாறு கருத்து திமுக நிர்வாகி மீது போலீசில் புகார்!

குற்றச் செய்திகள்

Update: 2025-01-08 05:25 GMT
புதுக்கோட்டை: தமிழக கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியினருக்கு சமூக வலை தளம் மூலமாக புதுகை மாவட்ட திமுக நிர்வாகி அப்துல்லா அழைப்பு விடுத்தார். அப்போது கவர்னர் ரவி குறித்து அவதூறாக விமர்சனம் செய்து பதி விட்டதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜ நிர்வாகி சரவணகுமார் தலைமை யில் கட்சியினர் நேற்று புதுகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.

Similar News