சீக்கனாங்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
சீக்கனாங்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அடுத்த சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சீக்கனாங்குப்பம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்போது கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு உள்ளன.வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கூறுவதாக உள்ள இந்த போஸ்டர்களில், 2024 - 25க்கான 100 நாள் வேலையில், தற்போது வரை 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு, 80 நாட்கள் வழங்கப்படாமல் உள்ளது. பணம் பெற்றுக்கொண்டு வீட்டு வரி ரசீது வழங்காமல் ஊராட்சி செயலர் அலைக்கழித்து வருகிறார். ஊராட்சி நிர்வாகம், ஊழல் செய்வதில் மட்டும் முதலிடத்தில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், அப்பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.