மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலங்கள் உள்ளன.சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், நில பிரச்னை தொடர்பாக, பல்லாவரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நேற்றுமுன்தினம், கலெக்டர் வளாகத்தில், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதுபோன்ற சம்பம் கலெக்டர் வளாகத்தில் நடைபெறமால் இருக்க, ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில், ஒரு பெண் போலீசார் உட்பட மூன்று போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, கலெக்டர் வளாகத்தில் போலீசார், நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.