திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி ஆசிரியை புதிய சாதனை
திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி தற்காலிக பெண் ஆசிரியை புதிய சாதனை ஏழ்மை நிலையிலும் திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி தொடர் சாதனை படைக்கும் கிராமத்து பெண்
திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி தற்காலிக பெண் ஆசிரியை புதிய சாதனை ஏழ்மை நிலையிலும் திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி தொடர் சாதனை படைக்கும் கிராமத்து பெண். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் திலகவதி பாஸ்கர் (வயது 37). சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் வாழ்வியல் நெறிகளைக் கூறும் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டியும், மாநில நூலாக்க வேண்டியும் பட்டாணி, கடலை பருப்பு போன்ற சிறுதானியங்களிலும், சிறிய வண்ணக் கற்களிலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்தார். அதன் தொடர்ச்சியாக உடைத்த கடலையில் 5 நிமிடத்தில் 115 திருக்ககுறளை எழுதி இந்தியா புக் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து புதிய சாதனை படைத்தார். பல நூல் படைப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் 2024 வரிகளில் கவிதை, நூற்றுக்கு நூறு கவிதை, கண்ணை கட்டி கவிதை என பல்வேறு படைப்புகளை உருவாக்கிய இவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.