புளியங்குடியில் திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள புளியங்குடியில் கே.வி.கே சாமி திடலில் வைத்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக இளம் பேச்சாளர் மோகநிதி, பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி பாண்டியன், திமுக புளியங்குடி நகர கழக செயலாளர் நகர் மன்ற துணை தலைவர் அந்தோணிசாமி, தென்காசி திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.