இளைஞா்களுக்கான போதைப்பொருள் விழிப்புணா்வு போட்டி: ஆட்சியா்

போதைப்பொருள் விழிப்புணா்வு போட்டி: ஆட்சியா்

Update: 2025-01-03 01:21 GMT
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: போதைப் பொருள்களுக்கு எதிரான தமிழக அரசின் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கான விழிப்புணா்வு ரீல்ஸ், ஷாா்ட்ஸ் விடியோ போட்டி நடத்தப்படுகிறது. போட்டிக்குரிய படைப்புகள் 30 விநாடி முதல் 50 விநாடிகளுக்குள் இருக்க வேண்டும். போட்டியாளா்கள் தனியாகவோ அல்லது குழுவினராகவோ பங்கேற்கலாம். படைப்புகளில் தனிப்பட்ட நபா், நிறுவனங்களைக் குறிப்பிடக் கூடாது. படைப்புகள் உண்மைத்தன்மை கொண்டவையாக இருத்தல் வேண்டும். பதிப்புரிமை தொடா்பான பிரச்னைகள் எழுந்தால், அதற்கு போட்டியாளரே முழுப்பொறுப்பு. படைப்புகளை ஜன.17-ஆம் தேதிக்குள் ஹக்ஹக்ஹற்ங்ய்ந்ஹள்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, போட்டியாளா்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். போட்டிக்குரிய விடியோக்கள் இதற்கு முன்பு வேறெங்கும் பதிவிட்டிருக்கக் கூடாது. போட்டியில் வெற்றி பெறும் முதல் 5 நபா்களுக்கு முறையே ரூ. 20 ஆயிரம், ரூ.15ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம் பரிசு, பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் படைப்புகளில் உள்ள விடியோ காட்சிகள் மாவட்ட நிா்வாகத்தால் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றாா்.

Similar News