போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய திமுகவினர்
பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு,தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைஞர் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதாசம்பட்டி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சியில் தலைமை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர்போர்வெல் E.ராஜி கலை, இலக்கிய, பகுத்தறிவு மாவட்டத் தலைவர் டி.ஏ.குமார் முன்னிலை என்.அன்பழகன், சுதா,பிரபு,தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி,அண்ணாமலை, வெங்கடாசலம் முன்னிலை வைத்தார். விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் மாவட்ட செயலாளர். தடங்கம். பெ. சுப்ரமணி வாழ்த்துரை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் மணி மாநில துணை செயலாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.