பேரூர்: ஈஷா யோகா மையத்தில் பாலியல் துன்புறுத்தல் !

ஈஷாவில் படிக்கும் போது மற்றொரு மாணவனால் தன்னுடைய மகனுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக தாயார் கோவை மாவட்ட காவல் நிலையத்தில் நேற்று புகார்.

Update: 2025-01-05 06:09 GMT
ஈஷா யோகா மையத்தில் இயங்கும் பள்ளியில் தனது மகன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஜக்கி வாசுதேவின் உரைகளால் ஈர்க்கப்பட்டு தனது மகனை அங்கு 10 வகுப்பு வரை படிக்க வைத்ததாகக் கூறும் அந்த பெண், 2016 -2018 வரை தனது மகன் மற்றொரு மாணவரால் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மற்றும் ஜக்கியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக அந்த பள்ளி இல்லையெனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இதன் மூலம் ஜக்கி இந்த சம்பவத்தை மறைமுகமாக ஊக்குவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஈஷா யோகா மைய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹைதராபாத்தில் இருந்து கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, கோவையில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஏன் பேசவில்லை என்றும் அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News