உழவர் நகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.இளைஞர் படுகாயம்.

உழவர் நகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.இளைஞர் படுகாயம்.

Update: 2024-10-31 14:27 GMT
உழவர் நகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் தீனா வயது 20. இவர் அக்டோபர் 21ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் வெண்ணை மலையில் இருந்து தண்ணீர் பந்தல் பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் உழவர் நகர் அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் பிரபாகரன் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ராயல் என்பீல்ட் வாகனம், தீனா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்ததில் அவருக்கு இடது கால் தொடை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தீனாவின் உறவினர் நந்தகுமார் வயது 33 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக, டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News