ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த பழைய பாளையம் ஸ்ரீ அங்காளம்மன்!
ஐப்பசி மாத அமாவாசை ,கேதார கௌரி நோன்பு விரதம் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழையபாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு தினசரி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.ஐப்பசி மாத அமாவாசை, கேதார கௌரி நோன்பு மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. தங்க கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.