ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு கேதார கெளரி நோன்பு இருந்து சுமங்கலி பெண்கள் வழிபாடு!
காளப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பலிஜாவாரு பஜனைமடம் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கேதார கௌரி நோன்பு விரதம் நடைபெற்றது. மூலவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிருஷ்ணா் ஆலயத்தில் ஐப்பசி அமாவாசையையொட்டி கேதார கெளரி விரதம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். காளப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பலிஜாவாரு பஜனைமடம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி ஆலயத்தில் கேதார கௌரி நோன்பு விரதம் நடைபெற்றது.மூலவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றன. தங்களுடைய கணவா் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், செல்வம் பெருகவும், சுமங்கலியாக வாழவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் இந்த விரதத்தைத் தொடங்கினா். இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் தேங்காய், வாழைப்பழம், அதிரசம் ,பூக்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்தனா்.புதிதாக திருமணம் செய்த பெண்கள் கெளரி விரதத்தையொட்டி தாலி பிரித்து கட்டுவதையும் செய்தனா். கோயிலில் சுவாமிக்கு படைக்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.