சுற்றுலா வந்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி ஆற்றுக்கு சுற்றுலா வந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலாளி பாபு தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

Update: 2024-11-01 17:10 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி  காவிரி ஆற்றில் விசைபடகு  இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரிசெய்தும் இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளை சுற்றிபார்த்தும் வருகின்றனர்.        இந்த நிலையில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் பூலாம்பட்டி படகு துறைக்கு நிறைய சுற்றுலாபயணிகள் வந்து படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது பூலாம்பட்டி படகுதுறைக்கு கோவை புதூர் பகுதியைசேர்ந்த பாபு(47) என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன்  பூலாம்பட்டிக்கு வந்து படகு சவாரி செய்தனர்.       தொடர்ந்து பாபு மற்றும் அவரது  நண்பர்களோடு காவிரிஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பாபு திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார் இதனையறிந்த அவரது நண்பர்கள் உடனடியாக பூலாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார் எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய பாபுவை சடலமாக மீட்டனர்.   பின்னர் பூலாம்பட்டி போலீசார் உயிரிழந்த பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் இருந்து சுற்றி பார்க்க வந்த பாபு பூலாம்பட்டி காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே சோகத்தையும் பூலாம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News