ஆலங்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆலங்குடி போலீசார் கல்லாங்குடியில் உள்ள பெட்டிகடையில் ஆய்வு செய்த போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெட்டிகடை உரிமையாளர் சம்சுதீன் என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.