அசோக் நகரில் மது குடித்ததால் விபரீதம். தூக்கிட்டு தற்கொலை செய்த முதியவர்.
அசோக் நகரில் மது குடித்ததால் விபரீதம். தூக்கிட்டு தற்கொலை செய்த முதியவர்.
அசோக் நகரில் மது குடித்ததால் விபரீதம். தூக்கிட்டு தற்கொலை செய்த முதியவர். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை அசோக் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 64. இவரது மனைவி தனலட்சுமி வயது 62. அண்மைக்காலமாக பழனிச்சாமி மது போதைக்கு அடிமையாகி இருந்தார். நாள்தோறும் மது குடித்து வந்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்து நவம்பர் 2ஆம் தேதி இரவு 11:30 மணியிலிருந்து நவம்பர் மூன்றாம் தேதி காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நவம்பர் மூன்றாம் தேதி வழக்கம்போல் காலை எழுந்து, வீட்டு வேலைகளை கவனிக்க சென்ற தனலட்சுமி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.