மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜவாஹிருல்லாவை தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜவாஹிருல்லாவை தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர

Update: 2024-11-08 10:08 GMT
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜவாஹிருல்லாவை தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான அமரன் படம் வெறுப்பின் விதைப்பு என்றும், வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். எச்.ராஜா சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசத்துரோகிகள். இவர்களை போன்றவர்களை, அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என பேசி இருந்தார். இதனை கண்டிக்கும் விதமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது தலைமையில் அக்கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் ஆகியோர் ஒற்றுமையுடன் வாழும் தமிழகத்தில் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செயல்பட்டு வருகிறார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் தேச துரோகி என்று பேசிய எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவை சந்தித்து புகார் மனு அளித்ததாக தெரிவித்தார். எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Similar News