பள்ளி மாணவி குழந்தை பெற்றெடுத்த விவகாரம் ஒருவர் கைது

அரசுப் பள்ளி மாணவி குழந்தை பெற்றெடுத்த விவகாரத்தில் உறவுக்கார இளைஞர் கைது

Update: 2024-11-08 12:18 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்தி பாளையம் பகுதி வசிப்பவர் பெருமாள்  சமையல் தொழிலாளியான இவருக்கு சுமார் 16 வயதில் பெண் குழந்தை உள்ளது.. ராசிபுரத்தில் வசித்து வந்த பெருமாள் தனது குடும்பத்தாருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்தி பாளையம் பகுதியில் குடியேறினார்.. தனது பெண் குழந்தையை பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்த்தார்..  இந்த அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில்   வியாழக்கிழமை அன்று  பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே,பள்ளி ஆசிரியர்கள் மாணவியை கைத்தாங்கலாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதும் பிரசவ வலி எடுத்திருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சில நிமிடங்களில் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது .  மேலும் இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல மருத்துவ அதிகாரிகள், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் பெற்றோர் ஆசிரியர் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டனர்..  மேலும் 11-ஆம் வகுப்பு கல்வி பயிலும் 16-வயதே  நிரம்பிய மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து தாய் சேய் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடுஅரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..  இந்நிலையில் மாணவியிடம் விசாரணை மேற்கொண்ட போது ராசிபுரத்தில் வசிக்கும் பொழுது தனது சித்தி மகன் ரங்கராஜ் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ராசிபுரம் போலீசார் ரங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையத்தில் உள்ள சமூக ஆர்வலர் ஆதவன் என்பவர் கூறும் பொழுது அரசு பள்ளியில் நடந்துள்ள இந்த நிகழ்வானது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் அரசு பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் சூழலில் இத்தகைய சம்பவம் மிகப்பெரிய உளவியல் ரீதியான பாதிப்புகளை மாணவிகளுக்கு ஏற்படுத்தலாம்.  எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அரசு பள்ளிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும்... குறிப்பாக பெண் குழந்தைகளிடம் குட் டச் ,பேட் டச் குறித்தான புரிதல்களை உருவாக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என கூறினார். இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News