ராசிபுரம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..
ராசிபுரம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொ.ஜோடர்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன்(61) என்பவரது வீட்டின் பராமரிப்பு பணியின் காரணமாக மேற்பகுதியில் உள்ள சுவரை இடிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சரவணன்(25) என்பவர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து மேலே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் சுற்றுச்சுவர் இடிப்பதற்காக ஒப்பந்ததாரர் மின்சார கம்பத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து பணிபுரிந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அதிக அளவில் பாய்ந்ததால் சரவணன் மின்சாரம் பயந்து இறந்ததாகவும்?, அதன் பிறகு சுற்றுச்சுவர் விழுந்து இறந்ததாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வருவதற்குள் மின் ஒயர்களை மின்சார கம்பத்திலிருந்து எடுத்து வீசி சென்றதாக தெரிவித்தனர்.