குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் மத்தியாஸ் (75). 100 நாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்தியாசுக்கும் குட்டை குழி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜான் கிறிஸ்டோபர் (42) என்பவருகும் குடும்ப கல்லறை தோட்டம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் மத்தியாஸ் டீ குடித்து விட்டு அப்பகுதியில் நடந்து சென்று நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த ஜான் கிறிஸ்டோபர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மத்தியா சை தகாத வார்த்தைகளால் திட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி காயப்படுத்தி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயமடைந்த மத்தியாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவட்டார் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான ஜான் கிறிஸ்டோபரை தேடி வருகின்றனர்.