ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள், அமைச்சர் மா மதிவேந்தன் தகவல்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் பொதுமக்களுக்கு மொத்தம் ரூ.56.14 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ தகவல்.

Update: 2024-12-04 14:21 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு வெள்ள நிவாரண முகாமில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட மருத்துவர் ச.உமா, தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் புயலின் காரணமாக பெய்த மழையினால் திருமணிமுத்தாறில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நீர் வரத்து 6,000 கன அடியாக உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதியில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 145 குடும்பங்களை சார்ந்த 421 நபர்கள் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு வெள்ள நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, பாய், போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரங்களில் அவர்களது குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த மேற்கண்ட பொது மக்கள் மற்றும் காந்திபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீடு வேண்டி அளித்த கோரிக்கை மனுக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கருத்துருவாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு 7 கனரக வாகனங்கள் மூலம் ரூ.56.14 இலட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள், பால் பவுடர், சர்க்கரை, ரொட்டி, சோப், தீப்பெட்டி, பக்கெட், மக், நைட்டி, லுங்கி, நாப்கின்கள், பெட்ஷீட் உள்ளிட்ட பல்வேறு வகையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் செல்வராணி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News