தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு முறையாக கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொடுக்கவில்லை என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் குற்றச்சாட்டு

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனதலைவர் திருமாறன் ஜி தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-12-04 16:05 GMT
6மாதங்களாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு முறையாக கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொடுக்கவில்லை என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் குற்றச்சாட்டு. மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தண்ணீர் அனுப்ப வேண்டும் என கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலருக்கு தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியினர் கோரிக்கை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1500க்கும் அதிகமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிகமான மக்கள் பயன்படுத்தும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைகை அணை - சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 6லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தண்ணீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் நோயாளிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டு பகுதிகளில் கழிவறைகளில் தண்ணீர் வராததால் சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டு முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த அவல நிலையால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கும், தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனதலைவர் திருமாறன் ஜி தலைமையிலான நிர்வாகிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்ட நிலையத்தை முற்றுகையிட்டு கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்கும் மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல்வாதிகள் தண்ணீரை எடுத்துவிடுவதாகவும்,குடியிருப்புகள் அதிகரித்த காரணத்தால் முழுமையான தண்ணீர் வழங்க முடியவில்லை என்றும், ஓரிரு நாட்களில் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்ட நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News