பாலத்துறையில் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2200 பறித்து சென்ற இருவர் கைது.
பாலத்துறையில் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2200 பறித்து சென்ற இருவர் கைது.
பாலத்துறையில் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2200 பறித்து சென்ற இருவர் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கழுகுர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் வயது 28. இவர் தற்போது கரூர், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறை பகுதியில் செயல்படும் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில், இவரது கடைக்கு வந்த, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, செந்தூர்நகர், 3-வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் கலையரசன் வயது 29 என்பவரும், வேலாயுதம்பாளையம்,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் தாவூத் வயது 25 என்ற இளைஞரும் ஐயங்கார் பேக்கரி மேலாளர் கலையரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2200 பறிமுதல் செய்து தம்பி சென்றனர். சம்பவம் தொடர்பாக ஐயங்கார் பேக்கரி மேலாளர் கலையரசன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், கலையரசனும், சேக் தாவூத்தும் ஈடுபட்டது அறிந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 470ஐ பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை டிசம்பர் 16ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். பிடிபட்ட இருவர் மீதும் கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.