கல்குவாரியை தடை செய்யக்கோரி கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

ஆலந்தா கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியை தடை செய்யக்கோரி கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2024-12-04 14:35 GMT
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல் புரம் அருகே உள்ள ஆலந்தா கிராம பகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக பிரமுகரான காசிராஜன் என்பவர் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் கல் குவாரி நடத்தி வருகிறார் .மேலும் காசிராஜன் அரசு விதிமுறைகளை மீறி முறையாக அனுமதி பெறாமல் கிராம மக்களிடம் கருத்து ஏதும் கேட்காமல் அரசு அதிகாரிகள் துணையுடன் கல் குவாரி நடத்தி வருவதாக ஆலந்தா மற்றும் சவாலாபேரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் மீது அவ்வப்போது விழுவதால் காயங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் உள்ளது.மேலும் கல்குவாரியில் ஆழம் தோண்ட தோண்ட கிராமப் பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவினை அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆலந்தா கிராம பகுதியில் உள்ள மாடசாமி கோவில் வளாகத்தில் ஆலந்தா மற்றும் சவாலாப்பேரி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டமைகள், தமிழ்நாடு விவசாய சங்கம், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினர், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் ஒன்று கூடி கருப்பு கொடி கையில் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் கல்குவாரி குவாரியை மூட மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கப்படாத பட்சத்தில் கல் குவாரியை மூடும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Similar News