அரசு காலணியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்த வாலிபர் கைது.
அரசு காலணியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்த வாலிபர் கைது.
அரசு காலணியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்த வாலிபர் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு காலணி பகுதியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சித்ராதேவிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 2-ம் தேதி அரசு காலணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, போதை தரும் மாத்திரைகள் 14 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அருகில் உள்ள கோயம்பள்ளி பகுதியைச் சேர்ந்த திலீபன் வயது 34 என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் வெங்கமேடு காவல்துறையினர்.