குருசடியை உடைத்து காவி கொடியை கட்டிய கும்பல் 

கொல்லங்கோடு அருகே

Update: 2024-11-08 13:29 GMT
. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கோனசேரி பகுதியில் புனித அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன்பு புனித அந்தோனியார் குருசடி உள்ளது. நேற்று இரவு யாரோ சமூக விரோதிகள் குருசடியின் முன் பக்க கண்ணாடி மீது கல் எறிந்து  உடைத்துள்ளனர்.       பின்னர் ஆலயத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காவி கொடியை கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இன்று ( 8-ம் தேதி) காலை குருசடிக்கு வந்த பொதுமக்கள் இதை பார்த்தது அதிர்ச்சி அடைந்தனர். உடனே  கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாக துணை தலைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  ராஜேஷ்குமார் எம் எல் ஏ  சென்று பார்வையிட்டு, சம்மந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Similar News