தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மானுர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 78.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை ஒரு ஆய்வுக்கூடம் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.