லாரி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தூத்துக்குடி துறைமுக சாலையில் துறைமுகத்தில் இருந்து கரி ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்கள் உடன் உயிர் தப்பிய லாரி டிரைவர்

Update: 2024-11-09 13:17 GMT
தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள தனியார் அனல் மின் நிலையத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று இன்று அதிகாலை துறைமுக சாலையில் வந்துள்ளது இந்த லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் அதிகாலை நேரம் என்பதால் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தூங்கி உள்ளார் இதில் சாலையிலிருந்து வெளியே சென்ற டிப்பர் லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் லாரியை ஒட்டி வந்த லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இதை தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News