சிறுவனை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது!
தூத்துக்குடி மேல சண்முகபுரத்தில் சாலையின் நடுவே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியதை கண்டித்த சிறுவனை தாக்கிய 4 பேரை தெனபாகம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சரவண குமார் என்ற சரவணன் (22). இவர் தனது பிறந்த நாளை சாலையின் நடுவே நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 16 வயது சிறுவன் சாலையை மறித்து நிற்காமல் வழி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த சிறுவனை சரமாரியாக கையால் தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் தந்தை கருணாகரன் (47) என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்படி படையில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரவணகுமார் மற்றும் அவரது நண்பர்களான டூவிபுரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்ற சசிதரன் (28), தாமோதர நகரை சேர்ந்த ஆனந்த் பாபு (25), கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பொன் ஜெயசூர்யா (19) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.