ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுவீந்திரன் (23). இவரும், களபம் துவரங்கொல்லைப்பட்டியைச் சேர்ந்த கவுரி என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் சாத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.