பெரியாண்டாங் கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்த மூன்று இளைஞர்கள் கைது. செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல்.
பெரியாண்டாங் கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்த மூன்று இளைஞர்கள் கைது. செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல்.
பெரியாண்டாங் கோவில் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்த மூன்று இளைஞர்கள் கைது. செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், எம்ஜிஆர் நகர், தெற்கு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் வயது 33. இவர் சோபா சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில், கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாண்டாங் கோவில் பகுதியில் உள்ள சதீஷ் என்பவரது ஒர்க்க்ஷாப்பில் குணசேகரனும் அவரது சகோதரர் ராஜா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு TN 48 AV 8114 என்ற எண் கொண்ட பல்சர் பைக்கில் வந்த, கரூர் மேற்கு ராமானுஜம் நகரை சேர்ந்த முருகேசன் மகன் கோகுல கண்ணன், இதே போல போட்டோகிராபர் தொழிலில் ஈடுபட்டு வரும், சின்னான்டாங் கோயில், பெரியசாமி நகர், பஸ்ட் கிராஸ்-ஐ சேர்ந்த கண்ணன் மகன் ஜோதிஸ்வரன் (எ)கௌஷிக், கரூர் கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக்-ல் முதலாம் ஆண்டு ஐடிஐ படித்து வரும், கரூர், வடக்கு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் கணேஷ் ஆகிய மூவரும், குணசேகரன் மற்றும் ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூபாய் 1,200-மற்றும்,ரூ.9,500- மதிப்புள்ள ரெட்மி மொபைலையும் பறித்தனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த அருள்மணி என்பவரிடம் ரூ.22.500- மதிப்புள்ள மோட்டரோலா செல்போனையும் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சடைந்த குணசேகரன் இது தொடர்பாக கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்திய போது, மேற்கண்ட மூவரும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டரோலா மற்றும் ரெட் மி மொபைல்கள், ரூபாய் 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து டிசம்பர் 3-ம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.