தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்; எட்டு மணி நேரம் நனைந்தபடி வகுப்பறையில் இருந்தால் ஜலதோஷம் காய்ச்சல் வரும் என பெற்றோர்கள் கவலை தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த மூன்று நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது இந்நிலையில் இன்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் பெற்றோருடன் செல்லும் மாணவ மாணவிகளும் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்கின்றனர் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதால் பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து எட்டு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதால் ஜலதோஷம் இருமல் சளி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வரக்கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். பள்ளி விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது வானிலை மையம் தூத்துக்குடிக்கு கனமழை என்று எச்சரிக்கை கொடுக்கவில்லை அதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.