மனு கொடுக்க வந்த இடத்தில் விவசாயிக்கு வலிப்பு மாவட்ட ஆட்சியர் கடும் உத்தரவு..
மின்வாரியம் இணைப்பு பெற்று தரக் கோரி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனுகொடுக்க வந்த இடத்தில் விவசாயிக்கு வலிப்பு நோய் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சை அளிக்க ஆட்சியர் உமா உத்தரவு.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் அவரது மகன் முருகேசன் விவசாயியான இவர் மின் இணைப்பு வழங்க மனு அளிக்க தாயாருடன் வந்தார் ஆனால் இவர் பெயரில் வீட்டில் பெயரோ ரசீதியும் இல்லை இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது இதில் ஆட்சியரிடம் மனு வழங்கும் போது தீடீரென வலிப்பு நோய் வந்தது இதனால் கூட்ட அரங்கில் முருகேசன் மயங்கி விழுந்தார் உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆட்சியர் உமா உத்தரவு படி 108 ஆம்புலன்ஸ் வர சொல்லி அதில் ஏற்றி அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் முருகேசனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு மருத்து உட்கொண்டு வருகிறார் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மனு கொடுக்க வந்தவர் ஆட்சியர் முன்னாடியே வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது