கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்கம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கல்லிடைக்குறிச்சி வழியாக செல்லும் தாம்பரம் கல்லிடைக்குறிச்சி செங்கோட்டை அதிவேக விரிவு ரயில் குறிப்பிட்ட நாள் தற்காலிகமாக மேல்மருவத்தூர் நிலையத்தில் நின்று செல்லும். பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டு கொண்டுள்ளனர்.