திசையன்விளையில் காலம் தாழ்த்தும் அரசு

எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி

Update: 2024-11-28 05:18 GMT
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை முகைதீன் காதர் ஷாகிப் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் இடத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகப் பணிமனையை உடனடியாக காலி செய்து அதனை ஜமாத்திடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழக அரசு அந்த இடத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News