கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.