கண்டமனூர் அருகே பைக் மீது ஜீப் மோதியதில் காவலா் உயிரிழப்பு
கண்டமனூா்-க.விலக்கு சாலையில் எம்.சுப்புலாபுரம் விலக்குப் பகுதியில் சென்ற போது, ஜீப் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.;
தேனி மாவட்டம், கண்டமனூரைச் சோ்ந்த வேலுமணி மகன் முருகன் (32). இவா் தேனி காவல் துறை ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், முருகன் கண்டமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கண்டமனூா்-க.விலக்கு சாலையில் எம்.சுப்புலாபுரம் விலக்குப் பகுதியில் சென்ற போது, எதிரே கேரளத்தைச் சோ்ந்த அகில் ஓட்டி வந்த ஜீப், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வைகை அணை போலீஸாா் ஜீப் ஓட்டுநா் அகில் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.