குடிநீர் கட்டணம் செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்.

குடிநீர் கட்டணம் செலுத்தத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை.;

Update: 2024-12-18 15:27 GMT
பரமத்தி வேலூர், டிச. 18: வேலூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தத் தவறினால், இணைப்பு துண்டிக்கப்படும் என வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சோம சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் பேரூராட்சியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணங் கள் இதுவரை செலுத்தாத பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தி னர் நிலுவை இன்றி உடனடியாக செலுத்திட வேண்டும். குடிநீர் கட்டணம் செலுத்தாத பொதுமக்களுக்கு பலமுறை அறிவிப்புக் கடிதம் வழங்கப்பட்டும் கட்டணம் செலுத்தாத குடி யிருப்புதாரர்களின் குடிநீர் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும். மேலும், சொத்து வரிடை அந்தந்த அரையாண்டுக்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் அபராதத்து டன் செலுத்த நேரிடும் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News