நாமக்கல்: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் துவக்க விழா !

ஆட்சி மொழி சட்ட வார துவக்க விழாவில் அனைவரும் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்று வலியுறுத்தல்

Update: 2024-12-18 15:45 GMT
நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக ஆட்சி மொழிச் சட்ட வாரம் துவக்க விழா நாமக்கல் போட்டி துறை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பொ.பாரதி வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட நூலக அலுவலர் ச.தேன்மொழி தலைமையேற்று விழா தலைமையுரை ஆற்றினார்,விழாவில் நாமக்கல் மைய நூலக நூலகர் சக்திவேல் தமிழ் மொழி முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பசுமை மா.தில்லைசிவக்குமார் பேசுகையில்....குழந்தைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தாய்மொழி தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என உரையாற்றினார்.கவிஞர் இல்ல நூலக நூலகர் செல்வம் அவர்கள் போட்டி தேர்வு மாணவ மாணவிகள் தமிழை ஆழ்ந்து படிக்க வேண்டும் அரசு பணியில் தமிழை முன் நிறுத்த வேண்டும் எனவும் கடந்த போட்டி தேர்வில் 22 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றதை பாராட்டி பேசினார்.மைய நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் கலை இளங்கோ போட்டி தேர்வு நூலகத்தில் பயிற்சி பெரும் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.போட்டி தேர்வு நூலக நூலகர் ஜோதி மணி ஆட்சி மொழி சட்ட வார துவக்க விழாவில் அனைவரும் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.விழாவில் போட்டி தேர்வு நூலகத்தில் பயிலும், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News