காவல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

Update: 2024-12-18 18:10 GMT
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முகாமிட்டு இன்று (18.12.2024) கள ஆய்வு மேற்கொண்டார். மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் (18.12.2024), திருவாரூர் மாவட்டத்தில் 2024 டிசம்பர் மாதத்திற்கான முகாம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் காலை 9.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News