மாவட்ட தொழில் மையத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

மாவட்ட தொழில் மையத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2024-12-18 20:09 GMT
அரியலூர்,டிச.19- : அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள மாவட்ட தொழில் மையத்தில், தமிழ்நாடு தொழில் முனைவோர்  மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், வர்த்தகத் துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.முகாமை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆ.லட்சுமி தொடக்கி வைத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து பேசினார்.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன மேலாளர் பிரவீன் கலந்து கொண்டு, மாவட்டத்திலுள்ள கலை மற்றும் பொறியியல் கல்லூரி தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு , எம்.எஸ்.எம்.இ திட்டங்கள், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்டங்கள், புத்தாக்கப் பற்று சீட்டு, அறிவுசார் சொத்துரிமைகள், ஓராண்டு தொழில் முனைவோர் பட்டய படிப்பு, தொழில் முனைவோர் ஆவதற்கான திறன் மேம்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். மேலும், பயிற்சி பெற்ற பேராசிரியர்கள், தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மூன்று நாள்கள் இந்த பயிற்சியை வழங்க அறிவுறுத்தப்பட்டது. முடிவில், மாவட்ட தொழில் மையத்தின் துணை இயக்குநர் விக்னேஷ் நன்றி கூறினார். :

Similar News